தபால்ஓட்டுக்கான விருப்ப படிவம் வழங்கும் பணி தீவிரம்

Update: 2021-03-08 08:00 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 80 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விருப்ப படிவத்தை வழங்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் வசிக்கும் 80 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிரமம் ஏற்படும் என்பதால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இன்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1802 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயது முதிர்வு அடைந்த 5155நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் விருப்ப படிவம் 12 டி, குமாரபாளையம் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி தலைமையில் வட்டாட்சியர் தங்கம் மற்றும் வருவாய் துறையினர் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் மொத்தம் 6 ஆயிரத்து 957 நபர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News