மோட்டார்பைக் மோதி விபத்து-மாணவன் பலி

Update: 2021-03-05 08:00 GMT

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மோட்டார் பைக் மோதியதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படையை அடுத்துள்ள செட்டியார் கடை பகுதியை சேர்ந்தவர் குமார். விசைத்தறி தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெப்படை அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் இன்று சைக்கிளில் தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சங்ககிரியில் தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலர் பணியினை முடித்து விட்டு அதிவேகமாக மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

இதில் செட்டியார் கடை அருகே வந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சைக்கிளில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ,சந்தோஷ்குமார் மீது மோதியதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த வெப்படை காவல்நிலைய போலீசார் உயிரிழந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் பைக்கை ஓட்டி வந்த தனியார் நிறுவன காவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News