மணமக்களுக்கு சிலிண்டர்,பெட்ரோல் பரிசு

Update: 2021-03-04 09:45 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு நினைவுப் பரிசாக கேஸ் சிலிண்டர், பெட்ரோலை பரிசு பொருட்களாக நண்பர்கள் வழங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவை விலை உயர்வடைந்து வருகின்றன.இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் சந்தித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை கட்டுபடுத்த வலியுறுத்தபட்டு வருகிறது.இந்நிலையில் நூதன முறையில் விலை ஏற்றத்தை சுட்டிக் காட்டும் விதமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நவீன்,சங்கமேஷ்வரி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறிக்கும் வகையில் காலி சிலிண்டர்களையும் , கருவேப்பிலை விலை உயர்வை குறிக்கும் வகையில் கருவேப்பிலை கொத்துகளை மணமக்கள் கைகளில் கொடுத்து பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் பெட்ரோலை கேன்களில் பிடித்து மணமக்களுக்கு நூதன பரிசாக வழங்கினார்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மணமக்கள் வலியுறுத்தினர்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகியுள்ளது.

Tags:    

Similar News