ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கத்தின் சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாரம் தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் தொடங்கி வாரம் தோறும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த வாரம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் பொதுமக்களுக்கான பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் குறித்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று கண்,பல்,உள்ளிட்ட உறுப்புகளை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு போதுமான அறிவுரைகள் மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கினர் .இதே போன்று குமாரபாளையம் ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்திலும் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக பல் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இதன் பின்னர் ஜே.ஜே.கே நடராஜா நினைவு இயக்கத்தின் சார்பில் இதுவரை நடத்தப்பட்ட இலவச சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு, பான்கார்டு, குடும்ப அட்டை, நலவாரிய பதிவுகள் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.