கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் வேலூர் நாடு தேவனூர் நாடு திண்ணனூர் நாடு சார்பில் கொல்லிமலை செம்மேடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குதிரை சாலையை தார் சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-28 04:41 GMT

கொல்லிமலை : தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் வேலூர் நாடு தேவனூர் நாடு திண்ணனூர் நாடு சார்பில் கொல்லிமலை செம்மேடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குதிரை சாலையை தார் சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேளூர்நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடுகளில் 15000 பேர் வசிப்பு

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், சேளூர்நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடுகளில் சுமார் 5000 மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 15000 பேர் வசித்து வருகின்றனர்.

மாவட்ட தலைநகருக்கு செல்ல 4 மணி நேரம் தேவை

குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மாவட்ட தலைநருக்கு செல்ல சுமார் 4 மணி நேரமும், 75 முதல் 90 கி.மீ வரை பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

மணப்பாறை சந்தைக்கு நீண்டதூரம் பயணம் செய்ய வியாபாரிகள் தயக்கம்

மணப்பாறை சந்தைக்கு நீண்டதூரம் பயணிக்க வியாபாரிகள் தயங்குவதால் விவசாயிகள் ஆகிய நாங்கள் விளை பொருட்களை சொற்ப விலைக்கே கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அவசர தேவைகளுக்கு மருத்துவமனை செல்ல நீண்ட நேர பயணம்

குறிப்பாக விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நீண்ட நேரம் பயணிக்க வேண்டியதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டில் இருந்த குதிரை சாலை

இதற்கு மாற்று வழியாக சேளூர்நாடு குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைசாலை இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

குதிரை சாலை தார் சாலையாக மாற்றினால் மாவட்ட தலைநகர் வருவதற்கு 34 கி.மீ. தூரம்

இக்குதிரை சாலையை தாங்கள் தார் சாலையாக அமைத்துக் கொடுத்தால் மாவட்ட தலைநகர் வருவதற்கு 34 கி.மீ. தூரம் மட்டுமே ஆகும்.

குதிரை சாலை தார் சாலையாக மாற்றினால் பல நன்மைகள்

இதனால் எங்களுக்கு பொருள், நேரம் மற்றும் உயிர் சேதாரம் ஏற்படுவது தடுக்கப்படும். மாணவர்கள் மாவட்ட தலைநகருக்கு சென்று உயர்கல்வி பயில்வதற்கு கூடுதலாக வாய்ப்பை ஏற்படுத்தி தரும். குதிரைசாலை புணரமைத்து தார்சாலையாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று கேட்டு சேலூர் நாடு தென்னனூர் நாடு தேவனூர் நாடுகளைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் வாழ்வில் ஓரி அரங்கத்தில் கூடினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சச்சிதானந்தம் அவர்களும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி டெல்லி பாபு அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் முத்து கண்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ ரங்கசாமி பி பெருமாள் ஏ டி கண்ணன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பொன்னுசாமி எஸ் தங்கராஜ் மாவட்ட செயலாளர் கே சி சின்னசாமி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெ சரவணன் மாவட்ட தலைவர் தங்கராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எம் தேன்மொழி எஸ் நர்மதா தேவி உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்ட சேலூர் நாடு திண்ணனூர் நாடு தேவானூர் நாடு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலை சுமையாக கொண்டு வந்த கோரிக்கை மனுக்கள்

முன்னதாக வல்வில் ஓர் அரங்கத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுக்களை தலை சுமையாக எடுத்துக் கொண்டு தாம்பூலம் தட்டுடன் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போராட்டக் குழுவினர் வந்தடைந்தனர்.

நூதன முறையில் மனு அளிப்பு

கொல்லிமலை வட்டாட்சியரிடம் போராட்ட குழுவினர் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் 27 டிசம்பர் அன்று வருவதாக கூறியிருந்தும் அலுவலகத்தில் இல்லாததால் தாம்பூல தட்டில் தேங்காய் பழம் பத்தி சூடத்துடன் நூதன முறையில் சிறப்பு நலத்திட்ட வட்டாட்சியரிடம்மனு நடைபெற்றது.

வட்டாட்சியர் உறுதி

பொதுமக்கள் கொண்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக உறுதி அளித்தார்.

2025 ஜனவரி 31 க்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களே சாலை அமைப்பார்கள்

இம்மனுக்கள் மீது 2025 ஜனவரி 31ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குதிரை ரோட்டை தார் சாலையாக அமைக்காவிட்டால் மக்களே ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவது என்று அறிவிக்கப்பட்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News