முடிவுற்ற டோல்கேட்டுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகளின் அவசர நடவடிக்கை
முடிவுற்ற டோல்கேட்டுகளை அகற்ற தவறினால் அரசின் நடவடிக்கை, பொதுப் பாதுகாப்புக்கான அவசர நடவடிக்கை;
முடிவுற்ற டோல்கேட்டுகளை அகற்ற நடவடிக்கை தேவை
ராசிபுரம் அடுத்த ஆண்டகளுர்கேட்டில் அகில இந்திய மோட்டார் வாகன கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை, சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மாநில பொதுச் செயலாளர் ராஜா, சொந்த வாகனங்களை வைத்து கள்ளத்தனமாக வாடகைக்கு இயக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 30 ஆண்டுகளுக்கு மேலாக மேக்சி கேப் வாகனங்களுக்கு 12+1 இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழகம் முழுவதும் முடிவு பெற்ற டோல்கேட்கள் அகற்றப்படாமல் இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலமாக ஆன்லைனில் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுவதால் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரினார். இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் யுவராஜா, முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.