குமாரபளையத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

நாளை குமாரபாளையம் ஹோலி கிராஸ் பள்ளியில் வயிற்று நோய்கள் குறித்து இலவச மருத்துவ ஆலோசனை மருத்துவ முகாம்;

Update: 2025-03-29 07:20 GMT

ஜெம் மருத்துவமனை சார்பில் நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது

கோவை ஜெம் மருத்துவமனையும் குமாரபாளையம் அரிமா சங்கமும் இணைந்து, குமாரபாளையம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றன. இம்முகாமில் குமாரபாளையம் அரிமா சங்கத் தலைவர் சரவணகுமார் தலைமை வகிக்கிறார். கோவை ஜெம் மருத்துவமனையின் உணவுக்குழாய், இரைப்பை மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி முன்னிலையில், ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், உணவுக்குழாய் இரைப்பை, குடலிறக்கம், கர்ப்பப்பை கோளாறு, பித்தப்பை கற்கள், மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், குடல்புண், மூலம், கணைய அழற்சி, குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். பரிசோதனைக்கு வருவோர் காலை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். முன்பதிவிற்கு 7358910515, 9842302485 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News