குமாரபாளையம் : ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்க கால்கோல் விழா..!
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்க கால்கோல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.;
நாமக்கல் : குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்க கால்கோல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிகள் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது
குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூா், எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியின் பின்பகுதியில் உள்ள மைதானத்தில் 9-ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
வாடிவாசல் அமைக்க சிறப்பு வழிபாடுகள்
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடைபெறும் இப்போட்டிக்கு வாடிவாசல் அமைக்க சிறப்பு வழிபாடுகளுடன் கால்கோல் நடப்பட்டது.
ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் தலைமையில்
இந்நிகழ்ச்சிக்கு, ஜல்லிகட்டு பேரவைத் தலைவா் வினோத்குமாா் தலைமை வகித்தாா். குமாரபாளையம் நகா்மன்ற தலைவா் த.விஜய் கண்ணன், பள்ளிபாளையம் நகா்மன்ற தலைவா் மோ.செல்வராஜ் ஆகியோா் ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தனா்.
பல்வேறு பிரமுகா்கள் பங்கேற்பு
நகா்மன்ற துணைத் தலைவா் வெங்கடேசன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் நாச்சிமுத்து, முன்னாள் நகரச் செயலாளா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.ஜல்லிக்கட்டு போட்டிக்காக நடைபெற்ற கால்கோல் விழாவில் பங்கேற்ற பிரமுகா்கள்