கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு..!

கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-25 05:20 GMT

கொள்முதல் விலையில் இருந்து 30 ரூபாய் குறைத்து கறிக்கோழிகளை பிடிப்பதால் ஒரு வாரத்தில் பண்ணையாளர்களுக்கு 50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தி

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் தினமும் 35 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்-ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கொள்முதல் விலை நிர்ணயம்

பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.

இந்நிலையில் நேற்று 12 ரூபாய் சரிந்து 84 ரூபாய் என கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் 12 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

பண்ணையாளர்கள் இழப்பு

எடை குறைவு காரணமாக கொள்முதல் விலையில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை குறைத்து கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை குறைக்கும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு காரணமாக தினமும் எட்டு கோடி ரூபாய் வீதம் ஒரு வாரத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் வரை பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

முட்டை விலை தொடர் உயர்வு

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து 485 காசுக்கு விற்ற முட்டை விலை 5 காசு உயர்த்தி 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நுகர்வு அதிகரித்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம்

சென்னை - 500

ஐதரா பாத் - 425

விஜயவாடா - 450

பர்வாலா - 442

மும்பை - 490

மைசூரு - 485

பெங்களூரு - 485

கோல்கட்டா  - 510

டில்லி - 460

முட்டைக்கோழி விலை நிர்ணயம்

நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஒரு கிலோ 77 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலை எட்டு ரூபாய் குறைத்து ஒரு கிலோ 65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கறிக்கோழி விலை நிர்ணயம்

பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஒரு கிலோ 96 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலை 12 ரூபாய் சரிந்து ஒரு கிலோ 84 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News