நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகள் விநியோகம்-ஆட்சியா் ச.உமா
நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் ச.உமா நேற்று வழங்கினாா்.;
நாமக்கல் : அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளை பிரசவித்தோருக்கு மரக்கன்றுகளை ஆட்சியர் ச.உமா திங்கள்கிழமை வழங்கினார்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசுப் பெட்டகங்கள் வழங்கும் விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்
முன்னதாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு ஓட்டத்தை ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட ஆட்சியர் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பெண் குழந்தைகளின் பிறப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கான கல்வி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பங்கேற்பாளர்கள்
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்ரி, மருத்துவ பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.