நாமகிரிப்பேட்டை, மாணவியின் மீது தாக்குதல்
நாமகிரிப்பேட்டையில் சர்ச்சை, திருமணத்திற்குப் பிறகு மாணவியைக் தாக்கிய இருவர் கைது;
நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி, மேற்கு தெருவைச் சேர்ந்த வையாபுரியின் மகள் ரோகினி (24) தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். பெருமாகவுண்டம்பாளையம், வன்னியர் தெருவைச் சேர்ந்த இளமதியின் மகன் தினேஷ்குமார் (26) டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் ரோகினியை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான சில தினங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டதால், தற்போது ரோகினி தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று தினேஷ்குமாரும் அவரது அண்ணன் நவீன்குமார் (28) ஆகிய இருவரும் ரோகினியின் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ரோகினி அளித்த புகாரின் அடிப்படையில், நாமகிரிப்பேட்டை போலீசார் தினேஷ்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.