சாலையின் நடுவே புதிய தடுப்பு சுவர்கள் -கவனிக்காமல் லாரி மோதி விபத்து
நாமக்கல் அருகே சாலையின் நடுவே புதிய தடுப்புகள் நேற்று வைக்கப்பட்டிருந்தது. எவ்வித முன் அறிவிப்பும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு வைக்கப் படவில்லை, இதை கவனிக்காமல் வேகமாக வந்த லாரி தடுப்பு சுவற்றில் முழுவதும் மோதியது.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த வெங்கடாசம் (34) என்பவர் சரக்கு லாரியில் பாண்டிச்சேரியில் இருந்து புண்ணாக்கு லோடு ஏற்றிக் கொண்டு காங்கேயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அடுத்த காவேட்டிப்பட்டியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்துள்ளாகி லாரியின் பின்பக்கம் வரை சேதமடைந்தன. இதில் லாரி ஓட்டுனர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று தான் ஏற்படுத்தப்பட்டன, என்பதும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான எவ்வித முன் அறிவிப்பும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு வைக்கப்படாததால் விபத்து நேர்ந்தது என்பதும் தெரியவந்தது.