சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் கைது
காதலிப்பதாகக் கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்தவர் வீரபெருமாள் மகன் ஐயப்பன்(22). கட்டடத் தொழிலாளியான இவருக்கு செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டில் இருந்து அவரை கடத்திச் சென்ற ஐயப்பன், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குபதிவு செய்து, ஐயப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.