மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கல்

ஏற்கெனவே விண்ணப்பித்த தகுதியுடைய பயனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2021-08-26 01:59 GMT

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசோதனை முகாம் 

மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளிகளை கண்டறிதல் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி உபகரணம், மதிப்பீடு மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாற்றுத்திறனாளிகளை கண்டறிய மனநலம், காது, கண், எலும்பு மற்றும் முடநீக்கியியல் வல்லுனர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் மாற்றுதிறனாளிகளை சோதனை செய்தனர். ஏற்கெனவே விண்ணப்பித்த தகுதி உடைய நபர்களுக்கு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் லலிதா  வழங்கினார். இதில் மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News