மயிலாடுதுறையில் வ.உ.சி 150-வது பிறந்த தினம்: காங்கிரசார் மலர்தூவி மரியாதை
மயிலாடுதுறையில் வ.உ.சி 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்கிரசார் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் முன்னிட்டு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் கட்சியினர் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.