விநாயகர் சதுர்த்தி பெருவிழா: பாஜக மாநில பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி பங்கேற்பு

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயிலில் ஊஞ்சலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது

Update: 2021-09-10 13:54 GMT

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா: பாஜக மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி பங்கேற்று வழிபட்டார்

மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவில் பாஜக மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி பங்கேற்று வழிபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயில், அடியாமங்கலம் செண்பகவள்ளி அம்மன் கோயில், மன்னம்பந்தல், மாயூரநாதர் கீழவீதி உள்ளிட்ட 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள கண்கொடுத்த விநாயகர் கோயிலில் ஊஞ்சலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், பாஜக மாநில இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதில், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News