மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்.
இல்லங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளவர்கள், உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்
மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழா . 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மயிலாடுதுறை நகரில் விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில், மயிலாடுதுறை நகரில் பொது இடங்களில் 25க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து, பூஜைகள் நடத்தி, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒட்டுமொத்தமாக காவிரி துலாக்கட்டத்தில் கரைப்பது வழக்கமாகும். ஆனால், நிகழ் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலமாகக் கொண்டு செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவில் 3 அடிக்குள் சிலைகளை வைத்துக்கொள்வது, அந்தச்சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளிலேயே ஒருசிலர் மட்டும் எடுத்துச்சென்று கரைத்துக்கொள்வது என பல்வேறு இந்து அமைப்பினரும் முடிவெடுத்தனர். அதன்படி, மயிலாடுதுறையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் கோயில்கள், தனியார் இடங்கள் மற்றும் வீடுகளிலும் 5 அடி உயரத்துக்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளது. வழக்கம்போல் இல்லங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொண்டாடுபவர்கள், உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.