போக்குவரத்து பணிமனையில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேத முருகன் தொடங்கி வைத்தார்

போக்குவரத்து பணிமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை பூம்புகார் எம்எல்ஏ நிவேத முருகன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-05-29 10:26 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை பூம்புகார் எம்எல்ஏ நிவேத முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அலுவலர்கள் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் நாகை மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மாரியப்பன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகண்டனர். முகாமில் செம்பனார்கோவில் வட்டார ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து 88 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் ஒரு சில பொது மக்களும் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.



Tags:    

Similar News