செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம்
அடிப்படை தேவைகள், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைக்கண்ணன், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், மற்றும் ஓன்றிய கவுன்சிலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை தேவைகள், சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். கோரிக்கை ஏற்று ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தெரிவித்தார்.