மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 தட்டச்சு பயிற்சி மையங்கள் இன்று முதல் திறப்பு

புதிய தளர்வுகளுக்குப்பின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 35 தட்டச்சு பயிற்சி மையங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின.

Update: 2021-07-19 07:02 GMT

இன்று முதல் செயல்படத்தொடங்கிய தட்டச்சு பயிற்சி மையம்.

ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 35 தட்டச்சு பயிற்சி மையங்கள் காலைமுதல் செயல்படத் தொடங்கின. ஆனால் குறைந்த அளவிலான மாணவர்களே பயிற்சி மையத்திற்கு வந்திருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்கத் தேவையான  கட்டுப்பாடுகளை ஜூலை 31-ஆம் தேதி வரை அரசு நீட்டித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணி முதல் ஏற்கெனவே இருந்த ஊரடங்கு தளர்வுகள் முடிவுக்கு வருவதையொட்டி, புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தட்டச்சு பயிற்சி மையங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 35 தட்டச்சு பயிற்சி மையங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டன. பயிற்சி மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். தட்டச்சு பயிற்சி மையம் திறக்கப்பட்ட தகவல் பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவராததால் குறைந்த அளவிலான மாணவர்களே பயிற்சிக்கு வந்தனர்.

Tags:    

Similar News