மயிலாடுதுறை அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

மயிலாடுதுறை அருகே இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததால் பூம்புகார் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.

Update: 2021-08-03 14:16 GMT

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கும் எம்எல்ஏ., நிவேதா முருகன்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி சேர்ந்த ரமேஷ், கலியபெருமாள் ஆகியோரின் கூரை வீடுகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இரண்டு வீடுகளும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. வீட்டிலிருந்த பாெருட்கள், உடைகள் அனைத்தும் எரிந்துவிட்டதால் ரமேஷ், கலியபெருமாள் குடும்பத்தினர் தவித்தனர்.

இதனை அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல உதவிகளை வழங்கினர்.

இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News