பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் அனுசரிக்கப்பட்டது
மயிலாடுதுறையில் நகர பாஜக சார்பில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாயியின் உருவப்படத்துக்கு மலர் தூவி, புகழஞ்சலி செலுத்தினார். இதில், நகர பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.