கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு
மயிலாடுதுறை, கீரனூரில் தலையில் தேரை தூக்கி நூதன வழிபாடு.
கீரனூர் கிராமத்தில் தேரை தலையில் தூக்கி நூதன வழிபாடு செய்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம், கீரனூரில் பழமையான அய்யனார், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக் கோயில்களில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு உற்சவம் கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த தேர் திருவிழா மற்ற கோயில்களை போல் அல்லாமல், நூதன முறையில் தேரினை தலையில் தூக்கி 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஊர் ல்லையான வயல் பகுதியை சுற்றிவந்து மீண்டும் கோவிலை அடைவார்கள். விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர் திருவிழாவை, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.