திருமாவளவன் பிறந்தநாள்; சீர்காழியில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

சிதம்பரம் எம்பி., திருமாவளவன் 59வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி விடுதலை சிறுத்தை கட்சியினர் கொண்டாடினர்.

Update: 2021-08-17 17:00 GMT

சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய விசிகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றம் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் புதிய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பால் பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் காமராஜ் முன்னிலையில் வழங்கினார்கள்.

இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News