சீர்காழியில் வாலிபர் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்ததால் பரபரப்பு
சீர்காழியில் வாலிபர் தூக்கிட்டு மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிவராமன்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சிவராமன் (26 ) கட்டிட தொழிலாளியான இவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தென்பாதியில் உள்ள நகராட்சி பூங்காவில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து இருந்தார். இதுகுறித்து அவரது பாட்டி சரஸ்வதி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சீர்காழி காவல்துறையினர் விரைந்து வந்து சிவராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேக மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் பொது இடத்தில் தூக்கிட்டு தொங்குவதை கண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.