மயிலாடுதுறை மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்பபுத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளுக்கும் தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று இரண்டாவது அலை ஓய்ந்துவரும் வேளையில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா பாட புத்தகங்கங்கள் வழங்குவதற்கு ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பும் பணி கடந்த ஒருசில தினங்களாக நடைபெற்றுவருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கல்வி மாவட்டங்களாக செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 42 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. சீர்காழி கல்வி மாவட்டத்தில்6 முதல் 12ஆம் வகுப்புவரை 60 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.
ஒட்டுமொத்தமாக 76,770 மாணவர்கள் கல்வி பயிலும் கணக்கில் உள்ளனர். இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் கிட்டப்பா மேனிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிடங்கிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
அதே போன்று சீர்காழியிலிருந்து 60 பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது. 75 சதவிகிதம் புத்தங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் வரும் புதன்கிழமைக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடப்புத்தங்கள் அனுப்பப்பட்டுவிடும் என்று பள்ளிக்கல்வி துறையினர் தெரிவித்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 93,621 மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர்.