கோயில் நில குத்தகை பாக்கி வசூலிக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு தகவல்
கோயில் நில குத்தகை பாக்கி தீவிரமாக வசூலிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில்
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் கழிப்பறைகள் பழுது நீக்கம் செய்ய ரூ 1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இந்தத் தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த கட்டிடங்கள் கழிப்பறைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்கவும் வாடகை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களின் நிலைமையை அறிந்து நிலத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும் இருப்பவர்களிடம் எடுப்போம் இல்லாதவருக்கு கொடுப்போம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம் கோயில் சொத்துக்கள். கோயில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் குத்தகை சாகுபடி வைத்திருப்பது குறித்து கண்டறிந்து, குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோயில் அறங்காவலர் தலைவர் பதவி ஆன்மீக பணியில் ஈடுபடுபவர்களை நியமனம் செய்வோம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணிக்கு 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் இவர்களில் தகுதி உடையவர்களுக்கு பணி வழங்கப்படும்.100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்கள் தொல்லியல் துறை நீதிமன்றம் ஆகியவை அடங்கிய 3 கமிட்டிகள் ஒப்புதல் தந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடியும். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து விரைவில் அனுமதி பெற்று கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்யப்படும்
கொரோனா நிவாரண நிதி அனைத்து கோயில் அர்ச்சகர்கள் பணியாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அப்போது இந்து அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் மயிலாடுதுறை ராஜ்குமார் உடன் இருந்தனர்.