மயிலாடுதுறையில் பாஜக சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் நினைவு தினம் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் சுபாஷ் சந்திரபோஸ் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியதை செலுத்தினர்.

Update: 2021-08-18 09:48 GMT

மயிலாடுதுறையில் சுபாஸ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பாஜக.,வினர்.

இந்திய சுதந்திர போராட்ட தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறையில் நகர பாஜக சார்பில் அவரது நினைவு தினம் அனுசரிமியக்கப்பட்டது.

நகர பாஜக அலுவலகத்தில் பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்ட நேதாஜியின் உருவப்படத்துக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் திரளான நகர பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததற்கு ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News