மயிலாடுதுறையில் விஜயகாந்த் குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை
தேமுதிக தலைவர் விஜயகாந்த பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறையில் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கேப்டன் அவர்கள் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள கேப்டன் முழு உடல் நலம் பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் ஜலபதி தலைமையில் மயிலாடுதுறை அடுத்த இளந்தோப்பு ஊராட்சி திருக்குரக் காவல் கிராமத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயசுவாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜகுமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜாராமன்,தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கம் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.