சீர்காழி நகராட்சி ஆய்வாளர் கடத்தி தாக்குதல் -கைது செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனை கடத்தி, தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-03 14:38 GMT

சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வளர் ராஜேந்திரனை கடத்தி மன்னார்குடி அருகே நேற்று தாக்கி வீசிவிட்டு தப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சீர்காழி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சி சுகாதார ஆய்வாளராக மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மன்னார்குடியிலிருந்து சீர்காழிக்கு பேருந்தில் வந்தவரரை மர்ம கும்பல் காரில் வலுக்கட்டாயமாக அவரை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றது.காரில் இருந்த ராஜேந்திரனிடம் கடுமையாக மிரட்டல் விடுத்து சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி மன்னார்குடி அருகே யாரும் இல்லாத இடத்தில் தூக்கி வீசிச் சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து மன்னார்குடி போலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சீர்காழி நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி நகராட்சி அலுவலக வாயிலில் திரண்ட அவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags:    

Similar News