சீர்காழியில் எரி சாராயம் விற்ற பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
சீர்காழியில் எரி சாராயம் விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு போரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன
இதனால் சீர்காழி சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் கிராமங்களில் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாடாளன் கோவில் காமராஜபுரம் சுமத்திரா (30) மற்றும் மாரிமுத்து (37) இருவரும் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சீர்காழி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சுமித்ரா வீட்டில் சோதனை செய்த போது அவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட எரிசாராய பாக்கெட்டுகள் மற்றும் 9,800 ரூபாய் பணம் பறிமுதல் செயதனர். மேலும் சாரயம் விற்பனை செய்த இருவரையும் கைது செய்தனர்.