வைத்தீஸ்வரன்கோயிலில் ரவுடி மீது தாக்குதல் -5பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் ரவுடியை 5பேர் கொண்ட கும்பல் சராமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.படுகாயமடைந்த ரவுடி சிகிச்சைபெற்றுவருகிறார்.
சீர்காழி அருகே மண்ணிப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தம்பிதுரை மகன் அருண்(35). இவர் பெயர் மணல்மேடு காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது.இந்நிலையில் அருண் வைத்தீஸ்வரன்கோயில் தெற்குவீதியில் ஒரு சந்து பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5பேர் கொண்ட கும்பல் அருணையை அரிவாளால் தலை மற்றும் கால்,கைகளில் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இரத்தவெள்ளத்தில் சரிந்த கீழே விழுந்த அருண் குறித்து அருகில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தவகலறிந்துவந்த போலீசார் அருணை மீட்டு சிகிச்சைகாக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ரவுடியை கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.