சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்ற எம்.எல்.ஏ.

சீர்காழி அருகே பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.;

Update: 2021-11-01 08:40 GMT

சீர்காழி அருகே பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.அதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி வளாகங்கள் முழுமையாக தூய்மை செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி கொரோனா வைரஸ் வழிமுறைகளை பின்பற்றி பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

அப்போது  மாணவர்களுக்கு, சானிடைசர், முககவசம் வழங்கி அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மலர் தூவியும், மலர் கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார்.பள்ளி மாணவ செல்வங்களும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் பள்ளிக்கு வந்தனர்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர், சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், வட்டார கல்வி அலுவலர் லட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News