சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கல சுறா

சீர்காழி அருகே பழையாரில் 3 வயது அரிய வகை திமிங்கல சுறா ஒன்ற இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.;

Update: 2021-08-31 13:10 GMT

பழையாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மூன்று வயது அரிய வகை திமிங்கல சுறா.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது துறைமுக பகுதியில் 5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் திமிங்கல சுறா இறந்து மிதந்துள்ளது.

அதனை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததுடன் கடலோர காவல் துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த திமிங்கல சுறா கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் மிகவும் அரிய வகையை சார்ந்தது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் மூலம் திமிங்கல சுறாவை பிரேத பரிசோதனை செய்து வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News