மயிலாடுதுறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-17 14:03 GMT

பரவாலாக பெய்த மழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர். 

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், இன்று மாலை 5 மணி அளவில்  மாவட்டத்திலன் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.

மயிலாடுதுறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வடிகால் வசதி இல்லாத சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பருத்தி சாகுபடி செய்து அறுவடைக்காக காத்திருக்கும் பருத்தி விவசாயிகள் மட்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News