மயிலாடுதுறையில் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன

மயிலாடுதுறையில் கன மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

Update: 2022-05-07 23:30 GMT

மயிலாடுதுறை கொள்முதல் நிலையங்களில்,மழையில் நடைந்த நெல் மூட்டைகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படு விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும் மார்ச் மாதம் முதல் மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை,  பாதுகாப்பாக வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் ஒருசில நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து அகற்றப்படாமல், அங்கேயே தார்பாய்கள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  இரவு பெய்த கன மழையால் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி உள்ளது. அவற்றை உடனடியாக லாரிகள் மூலம் கிடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் இல்லையென்றால் நனைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கிவிடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News