மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3வது நாளாக தொடரும் கன மழை
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது.;
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
சம்பா பயிர்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ள நிலையில், தற்போது 3நாட்கள் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பயிர்கள் சாய்ந்து மழையால் பாதிக்கப்படும் என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.