மயிலாடுதுறை அருகே சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்க பொது மக்கள் கோரிக்கை

Update: 2021-08-10 12:12 GMT

மயிலாடுதுறை அருகே ரூரல் டவுன் ஸ்டேஷன்  ஊராட்சியில் சாராய விற்பனை நடைபெறுவதை தடுக்கக் கோரி 30க்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மயிலாடுதுறை ரூரல் டவுன் ஸ்டேஷன் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சாராய விற்பனை நடைபெற்று வருவதை தடுக்க கோரி 30க்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில் தங்கபிரகாசம் என்பவர் சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலர், போட்டி போட்டுக்கொண்டு சாராய விற்பனை செய்து வருவதாகவும், போலீஸ் மாமூல் வாங்கி கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். சாராயம் குடித்துவிட்டு பலர் அப்பகுதியில் பிரச்னையிலும் ஈடுபடுவதாகவும் உடனடியாக சாராய விற்பனையை தடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News