விலை உயர்வு: கட்டுமான பொறியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சிமெண்ட், கம்பி விலை ஏற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில், கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-10-26 09:30 GMT

மயிலாடுதுறையில் கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,  கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர்,  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  சிமென்ட், கம்பி மற்றும் இதர கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News