சீர்காழி அருகே தரமற்ற அரிசி:தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆலையில் அரைக்கப்படும் அரிசி மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது

Update: 2022-01-07 08:30 GMT

சீர்காழி அருகே தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்து எருக்கூர் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்து எருக்கூர் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய  கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி  ஒப்பாரி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. இந்த அரிசி ஆலையில் அரைக்கப்படும் அரிசியே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகள் தரமற்ற இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்தும் தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று எருக்கூர் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உண்பதற்கு தகுதியற்ற, தரமற்ற அரிசியைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்தும், தரமான அரிசி வழங்க மாநில அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும் பெண்கள் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News