பூம்புகார் எம்எல்ஏ அலுவலகத்தை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் திறந்து வைத்தார்
செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் எம்எல்ஏ அலுவலகத்தை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் திறந்து வைத்தார்.;
பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் செம்பனார் கோவிலில் உள்ளது. பூம்புகார் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகனிடம் சட்டமன்ற அலுவலகத்தை பொதுப்பணித்துறையினர் ஒப்படைத்தனர். இன்று சட்டமன்ற அலுவலகத்தை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தெரிவித்து தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.