பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன்முன்னிலையில் திமுகவில் இணைந்தமாற்றுக்கட்சியினர்
குத்தாலம் ஒன்றியம், கரும்பூர் ஊராட்சியில் அதிமுக, பாமக கட்சிகளைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை அருகே அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பூர் ஊராட்சியில், அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி, நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் முன்னிலையில், தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் இரா. முருகப்பா,அப்துல்மாலிக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக் , தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்