மாணவியை கடத்தி பாலியல் சீண்டல்; வாலிபர் போக்சோவில் அதிரடி கைது

மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-08-08 14:26 GMT

கைது செய்யப்பட்ட அன்பரசன்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ரெட்டி கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் அன்பரசன் (23) . இவர் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான 17 வயது  பிளஸ் 2 மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் உடனடியாக அன்பரசனை கைது செய்தனர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News