செல்போனில் கவனம் சிதறாமலிருக்க எஸ்.பி. யோசனை: சமூக வலைதளங்களில் வைரல்
ஆன்லைன் வகுப்பின்போது செல்போனில் மாணவர்களின் கவனம் சிதறாமலிருக்க மயிலாடுதுறை எஸ்.பி. கொடுத்த யோசனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களைப் படித்து வருகின்றனர். மேலும், ஆன்லைன் வழியாக தேர்வும் எழுதி வருகின்றனர். மாணவர்களுக்கு இது முற்றிலும் புதிது என்பதாலும் செல்போன் உபயோகிக்காத மாணவர்களும் கட்டாயம் செல்போன் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதால், நெட் வசதியுடன் கூடிய செல்போனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் மூலம் தேவையற்ற படங்களும், வீடியோக்களையும், திரைப்படங்களையும் காணும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இந்த செல்போன்மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். செல்போனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் பெரும்பாலும் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வழி உள்ளது என்றும் இதனால் செல்போனில் ஒருசில மாற்றங்களை செய்யவேண்டும் என்றும், என்னென்ன மாற்றங்களை எவ்வாறு செய்யவேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுகுணசிங், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.