சீர்காழியில் அனுமதியின்றி ஆய்வு; அதிகாரிகள்- மீனவர்கள் வாக்குவாதம்

சீர்காழியில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், மீனவர்களின் வாக்குவாதத்தால் ஆய்வு செய்யமுடியாமல் திரும்பிச் சென்றனர்.

Update: 2021-07-27 12:17 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் - அதிகாரிகள்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்டுத்துவதாக அறிவித்திருந்தார். இதைனையடுத்து கடந்த 8 நாட்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தரங்கம்பாடி மற்றும் தொடுவாய் கிராமங்களில் அதிகாரிகள், வலைகள், படகுகளின் நீளம், இஞ்சின் திறன் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தகவல் அறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர். தங்கள் கிராமத்தில் ஆய்வு செய்வது குறித்து எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் அனுமதியின்றி ஆய்வு மேற் கொள்வதாக கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.

மேலும், தங்கள் பயன்படுத்தும் வலைகள் 1983 சட்ட விதியின் கீழ் வராது எனவும் சுருக்குமடி வலையை பயன்படுத்திய கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

சுருக்குமடி வலைக்கு ஆதரவாக போராடிய பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே தங்கள் கிராமத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி அதிகாரிகளை தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் தரங்கம்பாடி, தொடுவாய் கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News