மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை எம்.எல்.ஏ.ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை புறவழிச்சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொது முயற்சிசெய்தேன். அதன்பின்னர், ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில்போடப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வுபணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Update: 2021-07-21 16:10 GMT

மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை எம்.எல்.ஏ.ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரை சுற்றி புறவழிச்சாலை அமைப்பதற்காக மாப்படுகை, பல்லவராயன் பேட்டை, உளுத்துக்குப்பை ஆகிய பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் பாதிப்பு இல்லாமல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், தனியார் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், எம்.எல்.ஏ.ராஜகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை புறவழிச்சாலை அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொது முயற்சிசெய்தேன். அதன்பின்னர், ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில்போடப்பட்டது.

தற்போது அதைக் கொண்டு வருவதற்காக மீண்டும் ஆய்வுபணிகளை தொடங்கப்பட்டுள்ளன. திட்ட மதிப்பீடு, நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டிய பணிகள், ரயில்வே மேம்பாலம் தனித்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

16.6 கி.மீ தொலைவுக்கு புறவழிச்சாலை (ரிங்ரோடு) அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து சீர்காழி புறவழிச்சாலை வரை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படடுள்ளது. அதில் இந்த புறவழிச்சாலை (ரிங்ரோடு) இணைக்கப்பட உள்ளது. பணிகள் துரிதப்படுத்த ஆய்வை தொடங்கியுள்ளோம்.

இது குறித்து, தமிழக முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். புறவழிச்சாலை அமைக்கு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விரையில் இப்பகுதியில் ஆய்வு செய்வார் என்றும் புறவழிச்சாலை அமைக்க முதல்கட்டமாக திருவிழந்தூரில் இருந்து உளுத்துக்குப்பை வரைநிலம் ஆர்ஜிதம் செய்து 7 கி.மீ, தூரம் சாலை பணிகள் முதலில் தொடங்கும். மன்னம்பந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய இருப்பதால், உளுத்துக்குப்பை-மணக்குடி-மன்னம்பந்தல் வரையிலான திட்டமதிப்பீடு தயாரித்து விரைவில் அந்த பணிகளும் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார் எம்எல்ஏ-ராஜ்குமார்.

Tags:    

Similar News