மயிலாடுதுறை: ஆரம்ப சுகார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
மயிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.;
மயிலாடுதுறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார், தரங்கம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடமும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார். ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.