குத்தாலத்தில் மதிமுகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

குத்தாலத்தில் மதிமுகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தகோரியும் போராட்டத்தில ஈடுபட்டனர்

Update: 2021-07-23 07:15 GMT

குத்தாலம் தலைமை தபால் நிலையத்தில் மதிமுகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலையை கட்டுப்படுத்தகோரியும் பிரதமருக்கு மனு அனுப்பினர் 

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த கோரி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தலைமை தபால் நிலையம் முன்பு மதிமுகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் விலையை கட்டுப்படுத்தகோரி பிரதமருக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோரிக்கை மனுவை தபால் பெட்டியில் பிரதமருக்கு அனுப்பி வைத்தனர். மதிமுக மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்; ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News