மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, தரங்கம்பாடி மன்னம்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது சம்பா நாற்றுகள் நடவு பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் பலத்த மழை பெய்தது விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.