மயிலாடுதுறை: ரயில்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டனஆர்ப்பாட்டம்

Update: 2021-08-11 12:28 GMT

மயிலாடுதுறையில் ரயில் நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை  ரயில் நிலையம் முன்பு ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ரயில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. மத்திய அரசை கண்டித்தும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் நோயாளிகள் பயன்படுத்தும் வகையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் மின் தூக்கும் மற்றும் நகரும் படுக்கைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

Tags:    

Similar News